Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 3 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Vijay-2025-09-20

கரூர், கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் காயம் அடைந்தவர்கள் புதன்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆஜராகி சி.பி.ஐ. அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 5-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப் பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு புதன்கிழமை காலை 11 மணியளவில் நெரிசலில் சிக்கி காயமடைந்த மூன்று பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து