முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நம்பிக்கை

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-21

சென்னை, 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும் '2.0 முதல்வராக' வருவார் என்று நம்பிக்கை தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, பா.ஜ.க. எதிரணியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக் காலம் விளையாட்டுத் துறைக்குப் பொற்காலமாக உள்ளது. ஒலிம்பிக் செஸ் போட்டி, கார் பந்தயம் போன்ற உலகளாவிய போட்டிகளைத் தமிழ் மண்ணில் நடத்தியது பெருமை என்றும், உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வெற்றி கோப்பை இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு அமித் ஷாவுடன் போடப்பட்ட அரசியல் ஒப்பந்தம்தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டிற்கு விரோதமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்படுவதாக விமரிசனம் செய்த அப்பாவு, சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் ரூ.2,000 கோடி நிலுவை, புயல் நிவாரணத்திற்காகக் கேட்கப்பட்ட ரூ.37,000 கோடியை வழங்காதது மற்றும் விளையாட்டுத் துறைக்கு குஜராத்திற்கு ரூ.663 கோடி ஒதுக்கிய நிலையில் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியது போன்ற நிதிப் பாரபட்சங்களைக் கடுமையாகச் சுட்டிக்காட்டினார். மேலும், ஏழை மாணவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், குஜராத்தைச் சேர்ந்த பெருநிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது மத்திய அரசின் தவறான செயல் என்று குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம் நடுநிலைமை தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அப்பாவு, தற்போது பிரதமரின் ஆணையை ஏற்று நடக்கும் ஆணையமாக மாறிவிட்டது என்றும் அதுவொரு "மோசடி ஆணையம்" என்று விமர்சித்தார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அமைதியாகவே உள்ளது என்றும், தில்லியில் இருப்பதைப்போல் மக்கள் அச்சத்தில் இல்லை என்றும் கூறினார். தனிப்பட்ட விரோதங்களில் நடக்கும் சம்பவங்களுக்கு அரசு பொறுப்பல்ல. மேலும், சட்டப்பேரவையில் எந்த மனுவும் நிலுவையில் இல்லை என்றும், அதி.மு.க.வின் சமீபத்திய உச்ச நீதிமன்ற மனு நிராகரிப்பு அந்தக் கட்சியின் பலவீனத்தைக் காட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 2026 பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பா.ஜ.க. எதிரணியாக இருக்கும் என்றும், மக்களின் பேராதரவால் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் '2.0 முதல்வராக' வருவார் என்று அப்பாவு நம்பிக்கை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து