எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் அதிக அளவு கூடுகின்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக இருக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு முறை கடந்த 3 தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியில் இருந்து, 5 அடுக்கு பாதுகாப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் லக்கேஜில், கத்திரிக்கோல், ரேஷர் பிளேடு, பின்னல் ஊசிகள், கயிறு, இன்சுலேசன் டேப், வாக்கிங் ஸ்டிக், கோடாரி போன்ற கூர்மையான ஆயுதங்கள், ஊறுகாய் பாட்டில் உள்ளிட்டவைகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கம்போல் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த அதே வேளையில் திடீரென மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்னை விமான நிலையத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் எவ்வாறு அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒத்திகை மேற்கொண்டனர். திடீரென நடத்தப்பட்ட ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


