Idhayam Matrimony

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      தமிழகம்
Rain Wheather 2024-11-25

சென்னை, அடுத்தடுத்து 3 உருவாகும் 3 புயல் சின்னங்களால் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டு, தமிழ்நாட்டில் மழை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்தாலும், பருவமழை அளவுக்கு இல்லை. இந்த இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவகாற்று தமிழ்நாட்டில் முழுவதுமாக நேற்று முன்தினம் முதல் வீசத் தொடங்கியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் 16-ம்  தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்படி, வருகிற 15-ம்  தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ம்  தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். 17, 18-ம்  தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும்.

18, 19-ம்  தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் அவர் மேலும் கூறினார். இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்கிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ம்  தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.

இதனைத்தொடர்ந்து 21-ம்  தேதி முதல் 25-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், பெரிய அளவில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என்றாலும், நீர்நிலைகள் நிரம்பும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதனையடுத்து 3-வது நிகழ்வாக தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்த நிலைகளை கடந்து, புயலாக வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இது முந்தைய 2 நிகழ்வுகள் நிறைவுபெற்றதும், இந்த புயல் எப்படி இருக்கும்? எங்கு கரையை கடக்கும்? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து