Idhayam Matrimony

மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுக்கவில்லை: தி.மு.க. வழக்கறிஞர் தகவல்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை என்று தி.மு.க. வழக்கறிஞர் தகவல் 

மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி தரவில்லை என தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

2018-ல் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தங்களது குறைகளை தெரிவியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

மேகதாது அணை தொடர்பான குறைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அதை மீறி அவர்கள் ஏதாவது செய்தால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு இந்த உத்தரவு நமக்கு வழி வகுக்கும். அதற்குள், மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக சில ஊடகங்களில் தவறுதலாக செய்திகள் வந்துவிட்டன. அது தவறு. மேகதாது அணை கட்டிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு எந்த அனுமதியையும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து