Idhayam Matrimony

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
RN Ravi 2023-04-06

Source: provided

சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 9 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, உள்ளாட்சி அமைப்பு சிறப்பு அதிகாரிகளில் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்டமசோதா, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா ஆகியவைகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து