எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஆணவ படுகொலை விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாணை ஆணையத்திற்கு உறுப்பினர்களை
நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆணவ படுகொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆணையத்தின் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பழனிகுமார், ராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆணையம் ஆணவ படுகொலையை தடுப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் ஆகியோரிடம் ஆணையத்தின் உறுப்பினர்கள் கருத்துகளை கேட்க உள்ளனர். மாநிலத்தில் நடந்த ஆணவ படுகொலைகளுக்கான காரணங்கள் உள்ளிட்ட தரவுகளை சேகரித்து, இனி வரும் காலங்களில் ஆணவ படுகொலையை தடுப்பதற்கான பரிந்துரையை வழங்க உள்ளனர். இது தொடர்பான அறிக்கையை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


