முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. அக்டோபர் மாத விருது: தென் ஆப்பிரிக்க அணி வீரர் முத்துசாமி, வீராங்கனை லாரா வோல்வார்ட் தேர்வு

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      விளையாட்டு
13-Ram-92

Source: provided

துபாய்: ஐ.சி.சி. சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பரிந்துரை பட்டியலில்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபார் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் செனுரன் முத்துசாமி (தென் ஆப்பிரிக்கா), நோமன் அலி (பாகிஸ்தான்) மற்றும் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் இடம்பெற்றனர்.

முத்துசாமி-வோல்வார்ட்...

இந்த நிலையில் அக்டோபார் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வென்றுள்ளார்.அதேபோல் அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா (இந்தியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றனர். இதில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து