எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஐ.பி.எல். ஏலத்தில் புதிய வீரர்களை இன்று ஏலம் எடுக்கவுள்ள சி.எஸ்.கே. அணி தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம் வெளியாகியுள்ளது.
சமர்ப்பிக்க கெடு...
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்று 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
விஜய் சங்கர், ஹூடா....
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், கழற்றிவிடப்பட்டும் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெளிநாட்டு வீரர்களில் ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே (நியூசிலாந்து) ஆகிய வீரர்கள் கழற்றி விட உள்ளதாகவும் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களான விஜய் சங்கர், ராகுல் த்ரிபாதி, தீபக் ஹூடா ஆகியோர் உள்பட பல வீரர்களை கழற்றி விட உள்ளாதவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுஸ் மாத்ரே, உர்வில்...
இந்திய வீரர்களில் ஆயுஸ் மாத்ரே, உர்வில் படேல் தக்க வைக்கப்படுகின்றனர். வெளிநாட்டு வீரர்களில் பிரேவிஸ், நாதன் எல்லீஸ், பத்திரனா ஆகியோர் தக்க வைக்கபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல அணிகள் எல்லிஸை ட்ரேட் முறையில் வாங்க ஆர்வம் காட்டிய நிலையில் சி.எஸ்.கே. அணி மறுத்துவிட்டது. ட்ரேட் முறையில் ஜடேஜா, சாம் கரன் வெளியேறுகின்றனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் இன்று நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


