முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர் பணிகளை இன்று முதல் புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
EMPLOYEES

Source: provided

சென்னை : இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு செய்துள்ளது.

அதீத பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி இன்று எஸ்.ஐ.ஆர். பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. இது தொடர்பாக வருவாய் துறை கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எஸ்.ஐ.ஆர். திருத்தப்பணிகள் உரிய திட்டமிடல் என்றும் பயிற்சிகள் அளிக்காமலும் கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி வழங்காமல் அவசர கதியில் மேற்கொள்வதற்கு நிர்பந்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து நிலை வருவாய் ஊழியர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் கலைந்திட வலியுறுத்தி இன்று முதல் எஸ்.ஐ.ஆர். புறக்கணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த வருவாய்த்துறை சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றும் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 17) மாலை, மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தலையிட்டு, சுமூகமான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து