Idhayam Matrimony

இ.பி.எஸ்.உடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
Eps 2024-12-03

Source: provided

சென்னை: தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன.

தற்போது ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள், மதி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த இரு கூட்டணியிலும் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். சேலத்தில் உள்ள இ.பி.எஸ். இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்தது. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.கே.வாசனுடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து