முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக இடம்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      இந்தியா
BJP 2024-03-05

Source: provided

பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சரவைியல் பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம்  தேதிகளில் நடைபெற்றது. 14-ம்  தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், பா.ஜனதா கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. 18-வது புதிய சட்டசபையை அமைத்ததற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்ட நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான பணி வேகம் எடுத்துள்ளது.

கவர்னர் ஆரிப் முகமது கானிடம் தேர்தல் இறுதி முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுத்துரைக்கும். அத்துடன், தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வரும். புதிய அமைச்சரவை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிமுறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த தயக்கம் காட்டி வந்த பா.ஜனதா, அவருக்கு முதல்வர் பதவி அளிக்க சம்மதம் தெரிவித்தது.

மேலும், கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் அமைச்சர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 6 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்தால், ஒரு அமைச்சர் பதவி என்ற வழிமுறை உருவாக்கப்பட்டது. அதன்படி, பா.ஜனதாவுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடம் அளிக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். அதாவது பா.ஜனதாவில் இருந்து 15 அல்லது 16 பேரும், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 14 பேரும் அமைச்சரவைியல் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. மேலும் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 3 அமைச்சர் பதவிகளும், மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து