எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திரிப்பொலி: ஐரோப்பியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், வங்காளதேசம், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 90 பேர் லிபியாவில் இருந்து 2 படகுகளில் மத்திய தரைக்கடல் வழியாக கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அகதிகள் பயணித்த படகுகளில் ஒன்று லிபியாவின் அல் கான்ஸ் நகர் அருகே சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து தொடர்பாக கடந்த சனிக்கிழமை லிபியா கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் கடலில் தத்தளித்த அகதிகளை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


