எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோவை : கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மோடி வந்தடைந்தார்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று (நவ.19) கோவைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரிடம் விரிவான கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். பின்வரும் விஷயங்களில் உங்கள் அன்பான பரிசீலனை மற்றும் நடவடிக்கையை நான் மனதாரக் கேட்டுக்கொள்கிறேன்:
இயற்கை விவசாயத்திற்கான அத்தியாவசிய உள்ளீடுகளை - மண்புழுக்கள், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் - அதிக மானிய விலையில் வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேங்காய் மற்றும் தக்காளி, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம், டெல்டா மாவட்டங்களில் நெல், திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை, பல மாவட்டங்களில் கரும்பு போன்ற ஒவ்வொரு முதன்மை பயிரும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட வேண்டும். கூடுதலாக, மறைந்த முதல்வர் அம்மா அறிவித்து, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக நான் மீண்டும் வலியுறுத்திய கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு தமிழக மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடைந்துள்ளது, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை அ.தி.மு.க. சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


