Idhayam Matrimony

சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      தமிழகம்
vijay 2025-01-06

சேலம், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடைபெற இருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது.

அதன்படி சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரச்சாரத்தைதொடங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், நேற்று சேலம் காவல் ஆணையரிடம் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர். அதில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது. மேலும் விஜய் பிரச்சாரத்திற்காக போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களை குறிப்பிட்டு த.வெ.க. மனு அளித்திருந்தது.

இந்நிலையில் சேலத்தில் 4-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப பணிகள் உள்ளதால் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு கொடுக்க இயலாது என்றும், 4-ம் தேதி தவிர்த்து மற்ற நாட்களில் அனுமதி தர தயார் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தகவல் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து