எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார இறுதி விடுமுறையையொட்டி, இன்று (21-ம் தேதி), நாளை (22-ம் தேதி) சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் அதிகம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கும் பஸ்களுடன் கூடுதல் சிறப்புப் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) 340 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை (நவ.22) 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று, நாளை தலா 55 பேருந்துகள் என மொத்தம் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 20 பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வருகிற 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


