முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      தமிழகம்
Eps 2025-11-20

Source: provided

சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதையும், தி.மு.க.வைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க.வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதையும் கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அ.தி.மு.க. சார்பில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், கள்ளக்குறிச்சி நகராட்சி, கச்சேரி சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் இரா. குமரகுரு முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து