எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும் ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி புறப்பட்டு 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ந் தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.
இதில் ரயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


