முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      தமிழகம்
Train 2025-11-20

Source: provided

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் (8 மணி நேரம் 40 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு திருத்தணி செல்லும் மின்சாரரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து காலை 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35, 10.40, 11.30 மதியம் 12, 1, 1.50, 2.40 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 6.50, 7.30, 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05, 11.30 மதியம் 1.05, 2.40, 3.05 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து காலை 9.55, 11.45 மதியம் 2.15 ஆகிய நேரங்களில் திருத்தணி செல்லும் மின்சார ரயில்களும், மதியம் 12.40, 1.25 ஆகிய நேரங்களில் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களும், காலை 10.30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.10, 11.15, மதியம் 12, 1.40 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரயிலும், திருநின்றவூரில் இருந்து காலை 7.55 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரயிலும், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. எண்ணூரில் இருந்து காலை 6.35 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயிலும், ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு எண்ணூர் வரும் மின்சார ரயிலும் என மொத்தம் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து ஆவடி மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில்கள் இருமார்க்கமாகவும் வழக்கமான அட்டவணைபடி இயங்கும். வருகிற 23-ந்தேதி மதியம் 12.10 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

இதன் காரணமாக அன்று காலை 6.30, 8.20, 11 மணிக்கு சென்டிரல் -அரக்கோணத்துக்கும், காலை 7, 7.25, 9.10 மணிக்கு சென்டிரல்-திருத்தணிக்கும், காலை 10.45 மணிக்கு சென்டிரல்-ஆவடிக்கும், காலை 9.50 மணிக்கு சென்டிரல்- திருப்பதிக்கும், காலை 8.15, 8.55, 10 மணிக்கு அரக்கோணம்- சென்டிரலுக்கும், காலை 7 மணிக்கு திருவள்ளூர்- சென்டிரலுக்கும், காலை 10.15 மணிக்கு திருத்தணி- சென்டிரலுக்கும், காலை 6.20, 7.35, 8 மணிக்கு அரக்கோணம்-கடற்கரைக்கும், காலை 8.50 மணிக்கு திருத்தணி-கடற்கரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிகின்றன. இதேபோல் காலை 11.15, மதியம் 12.55, 1.40, மாலை 3.45 மணிக்கு திருவள்ளூர்-திருத்தணிக்கும், மதியம் 12, 2.15 மாலை 3 மணிக்கு திருவள்ளூர்-அரக்கோணத்துக்கும், காலை 10.30, 11.15 மதியம் 12, 1.30, 2.15 மணிக்கு அரக்கோணம்-திருவள்ளூருக்கும், மதியம் 12.35 மணிக்கு திருத்தணி-திருவள்ளூருக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து