Idhayam Matrimony

நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய அடவிநயினார் அணை

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      தமிழகம்
manimuthar-falls

Source: provided

தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளபெறுக்கு காரணமாக நடப்பாண்டில் 6-வது முறையாக அடவிநயினார் அணை நிரம்பியது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் மலையடிவார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் குண்டாறு தொடர்ந்து நிரம்பி வழிகிறது. மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டாற்று வெள்ளம் தாமிரபரணியில் கலந்து ஓடுகிறது. மேலும் ஊர்ப்பகுதிகளில் பெய்த மழை தண்ணீரும் ஆற்றில் கலந்து செல்கிறது. 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேக்கரை பகுதியில் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது. இந்த அணை மூலம் சுமார் 72 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றது. அதுபோல் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கின்றது.

இந்த அணை நடப்பாண்டில் ஏற்கனவே 5 முறை தனது முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிந்தது. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மீண்டும் அணை நிரம்பியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அணையானது 6-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து