எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும், தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிறில் ரமபோசாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஜி20 மாநாடு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஜோகன்னஸ்பர்க் ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்தன. இந்த சந்திப்புகள் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப் பிரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் ரமபோசா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


