முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2025      தமிழகம்
modi

கனகோனா, கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் .

கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது.

இன்று பிற்பகல் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்று கோவா பொதுப்பணித்துறை மந்திரி திகம்பர் காமத் தெரிவித்தார். இது உலகின் மிக உயரமான ஸ்ரீ ராமரின் சிலையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கோவா கவர்னர் அசோக் கஜபதி ராஜு, முதல்வர் பிரமோத் சாவந்த் , மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக், மாநில மந்திரிகள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து