எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சில ரயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரயில்கள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தையே வந்தடையும்.
அந்த வகையில், தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நாளை முதல் 4-ந் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையம் வரையே இயக்கப்படும். அதேபோல், சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - ராமேசுவரம் சேது எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - ராமேசுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டிசம்பர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தே புறப்படும்.
மேலும், சென்னை எழும்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


