எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீனம்பாக்கம், டித்வா புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டித்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் நேற்று (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் நேற்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் நேற்று காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


