எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நீலகிரி : நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கூடலூர் வனத்துறையினர் 5 இடங்களில் இரும்பு கூண்டுகளை வைத்தனர். கூண்டில் புலிக்கு இரையாக ஆடுகளை கட்டி வைத்தனர். ஆனாலும், கடந்த 4 மாதங்களாக புலி சிக்காமல் போக்குகாட்டி வந்தது. பின்னர், கேரள மாநிலம் நெளம்பள்ளத்தில் இருந்து 30 அடி நீள ராட்சத இரும்பு கூண்டை கொண்டு வந்து புலியை பிடிப்பதற்காக வைத்தனர்.
இந்நிலையில், 4 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி நேற்று முன்தினம் ளஇரவு கூண்டில் சிக்கியது. புலி கூண்டுடில் சிக்கியதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் கூண்டில் சிக்கிய புலியை லாரியில் கொண்டு சென்று கூடலூரில் அடந்த வனப்பகுதியில் விட்டனர். புலி கூண்டில் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


