எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகார் தேர்தல் தோல்வியடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை நடத்தினார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் கைப்பற்றியது. இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். அதேவேளை, ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த படுதோல்வி ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பீகார் தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினர். டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பீகார் காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பீகார் தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


