Idhayam Matrimony

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியல் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025      இந்தியா
India 2023-09-17

Source: provided

புதுடெல்லி : லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியா 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், பொருளாதாரம், ராணுவத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், சமூகத்தின் நிலை மற்றும் உலகுக்கு அந்த நாடு அளிக்கும் பங்களிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாராகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு 'ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

பொருளாதாரத் திறன், ராணுவத்திறன், நிலைத்தன்மை, எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு, கலாசார செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தையும் (80.5 புள்ளிகள்), அதற்கடுத்தபடியாக சீனா 2-வது இடத்தையும் (73.7 புள்ளிகள்) பெற்று இருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் குறியீட்டின்படி, இந்த 2 நாடுகளும் மிக சக்திவாய்ந்த நாடுகளாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் (40 புள்ளிகள்) உள்ளது. இந்த புள்ளி விவரங்களை வைத்து இந்தியா முக்கிய சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த முன்னேற்றத்துக்கு நாட்டின் பொருளாதார மீட்பு, அதிகரித்த ராணுவ பலம், சர்வதேச அரங்கில் ராஜதந்திர செல்வாக்கு, அரசியல் முக்கியத்துவம் போன்றவை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதனையடுத்து 38 புள்ளிகளுடன் ஜப்பான் 4-வது இடத்திலும், ரஷ்யா 32.1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது. இந்த நாடுகள் நடுத்தர சக்திவாய்ந்த நாடுகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து