Idhayam Matrimony

இந்த ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மகா தீபத்தன்று மலை ஏறத்தடை

ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025      ஆன்மிகம்
Tiruvannamalai 2024-12-14

Source: provided

தி.மலை :  'டித்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் புதன் கிழமை மகா தீபத்தன்று பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு, அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவும், உயிர் சேதமும் ஏற்பட்டது. இதனால் மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது 'டித்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுனர் குழு அறிக்கையில் மலையேறும் பாதை தற்போது உறுதித் தன்மை அற்றும், ஏற்கனவே நிலைச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலை ஏறுவது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலையேற முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து