Idhayam Matrimony

விரைவில் முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி : பூண்டி ஏரியில் 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025      தமிழகம்
Cemparampakkam-2023-11-30

Source: provided

சென்னை : புயல் எச்சரிக்கையையொட்டி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியிலிருந்து 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புயல் எச்சரிக்கையையொட்டி, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் 21.73 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி. அளவில், தற்போது 3.048 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

ஏரிக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடியாக மட்டுமே இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டது. காலையில் மொத்தமாக 1,394 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில், உபரிநீராக 1,200 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. சென்னை குடிநீர்த் தேவைக்காக 165 கன அடியும், சிப்காட் பயன்பாட்டுக்கு 4 கனஅடியும் நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த 1,200 கனஅடி நீர் இரவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, நீர்பாசனத் துறையினர் ஏரியின் நீர் இருப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து