எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி இன்று கரூர் வருகிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே பலியான 12 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவையும் சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இந்த குழுவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் வி.மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்புக்குழு கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை கண்காணிக்க இன்று (திங்கட்கிழமை) கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியின் வருகையால் இந்த வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


