எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தென்காசி : சுரண்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வ பிரபு (50). இவரது மனைவி உஷா (40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உஷா, சுரண்டை நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். நேற்று காலை அருள்செல்வ பிரபு, இருசக்கர வாகனத்தில் தனது மனைவி உஷா மற்றும் மனைவியின் தங்கை பிளஸ்ஸி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு, தங்கள் விவசாய நிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சுரண்டை- சங்கரன்கோவில் சாலையில் இரட்டைகுளம் விலக்கு அருகே சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மோதியது. லாரியில் சிக்கிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


