Idhayam Matrimony

அவர் பெரிய தலைவர் இல்லை: இ.பி.எஸ். விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

கோவை : எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அவர் பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. என்னை பொறுத்தவரை தெளிவாக உள்ளேன். 

மக்கள் பதில் அளிப்பார்கள்" என தெரிவித்தார். முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைந்த நிலையில், நேற்று முன்தினம் கோபிச்செட்டிபாளைய பிரச்சாரத்தில் அவரை தாக்கி பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி,

வாக்குகளை கேட்க வீடு வீடாக வந்தவர், ராஜினாமா செய்ய மக்களிடம் அனுமதி கேட்டாரா?. அவரை அடையாளப்படுத்தியது, பதவி கொடுத்தது அதிமுக. ஆனால் நேற்று மாற்றுக்கட்சிக்கு சென்றிருக்கிறார். இவரா உங்களுக்கு நன்மை செய்ய போகிறார்? இவர் மக்கள் மீது அக்கறை கொண்டவரா? எடுத்த எடுப்பில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. 

கட்சியின் விதிமுறைகளை மீறியதாலேயே நீக்கம் செய்தோம். கடந்த 2-3 ஆண்டுகளாகவே உள்ளிருந்தே கட்சிக்கு துரோகம் செய்தவர். நல்லது செய்தவர்களுக்கு நல்லதே நடக்கும். கெடுதல் செய்தவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்." என விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து