எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராஞ்சி இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
349 ரன்கள்...
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரன்களைக் குவித்து அசத்தியது. நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் கடந்து சாதனை படைத்தார். ரோஹித் சர்மாவும் கே. எல். ராகுலும் அரைசதம் கடந்தனர்.
எளிதில் வெற்றி...
அடுத்து கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 11 ரன்களில் அந்த அணியின் 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், 4-ஆவது வீரராகக் களமிறங்கிய மேத்யூ ப்ரீட்ஸ் 72 ரன்கள் எடுத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அவருக்குப் பக்கபலமாக டோனி டி ஸார்ஸி 39 ரன்களும் டெவால்ட் ப்ரெவிஸ் 37 ரன்களும் எடுத்தனர்.
7-வது வீரராக....
இன்னொருபுறம் 7-வது வீரராக களமிறங்கிய மார்கோ ஜென்சென் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 39 பந்துகளில் அவர் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 70 ரன் எடுக்க ஆட்டம் தென்னாப்பிரிக்கா பக்கம் சென்றது. அவருக்கு பக்கபலமாக கார்பின் போஸ்ச் 67 ரன்கள் திரட்டி அசத்தினார். கடைசி கட்டத்தில் டெய்லண்டர்களான ப்ரேனெலன் சுப்ராயெனும் நேண்ட்ரே பர்கரும் தலா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆழ்ட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்கு உதவிய எக்ஸ்டராஸ்
இந்த போட்டியில் வெற்றி தோல்விக்கு முக்கிய பங்கு வகித்த எக்ஸ்டிரா ரன்கள். அதன்படி தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கியது. ஆனால் இந்தியா எக்ஸ்டிராவாக வெறும் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அதாவது தென்ஆப்பிரிக்கா 17 ரன்களை கூடுதலாக வழங்கியிருந்தது. கடைசியில் அதே 17 ரன் வித்தியாசத்தில் தான் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


