Idhayam Matrimony

தங்கம், வெள்ளி விலை உயர்வு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Gold 2024-10-28

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்றும்அதிகரித்து விற்பனையானது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,060-க்கும், சவரன் ரூ.96,480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து விற்பனையானது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.201-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. 

கடந்த 3 நாட்களுக்கு முன் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,070-க்கும், சவரன் ரூ.96,560-க்கும் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது.  இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் விற்பனையானது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,060-க்கும், சவரன் ரூ.96,480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து விற்பனையானது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.201-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து