எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : உக்ரைன் துறைமுகங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் 2 கப்பல்களை கடந்த வாரத்தில், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷ்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவின் முன்னணி செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவதே, இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான வழியாக இருக்கும் என புதின் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து, கருங்கடலில் கப்பல்களை உக்ரைன் தாக்குவது என்பது திருட்டுத்தனம் ஆகும். பொதுவான கடல் பகுதி கூட இல்லாமல், மற்றொரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது என்பது திருட்டுத்தனம் ஆகும்.
உக்ரைனின் இந்த திருட்டுத்தனத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரஷ்யா பரிசீலனை மேற்கொள்ளும் என குறிப்பிட்டு உள்ளார். உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதலை விரிவுப்படுத்தும். இந்த துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் புதின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


