Idhayam Matrimony

ஐ.சி.சி. தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் ரோகித் சர்மா; விராட் கோலி முன்னேற்றம்

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் குல்தீப் யாதவ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் உயர்ந்து 641 புள்ளிகளுடன் 6 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

இந்த வார பட்டியல்... 

சர்வதேச கிரிக்கெட் ஆடவர் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் நேற்று (டிச.3) வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியவர்களின் அடிப்படையில் ஐ.சி.சி. தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

நான்காவது இடம்...

ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 135 ரன்கள் குவித்து அசத்திய இந்திய வீரர் விராட் கோலி, ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேவேளையில், காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்காத இந்திய அணியின் பிரதான கேப்டன் ஷுப்மன் கில் இரு இடம் சரிந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார். இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அதே நிலையில் தொடர்கின்றனர்.

குல்தீப் முன்னேற்றம்...

பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் குல்தீப் யாதவ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் உயர்ந்து 641 புள்ளிகளுடன் 6 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் டி20 முத்தரப்பு தொடரில் விளையாடி வருகின்றன. அதில், சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை:

1) ரோகித் சர்மா - 783 புள்ளிகள்.

2) டேரில் மிட்செல் - 766 புள்ளிகள்.

3) இப்ராஹிம் ஜத்ரன் - 764 புள்ளிகள்.

4) விராட் கோலி - 751 புள்ளிகள்.

5) ஷுப்மன் கில் - 738 புள்ளிகள்.

6) பாபர் அசாம் - 722 புள்ளிகள்.

7) ஹாரி டெக்டர் - 708 புள்ளிகள்.

8) ஷாய் ஹோப் - 701 புள்ளிகள்.

9) ஷ்ரேயஸ் ஐயர் - 693 புள்ளிகள்.

10) சரித் அசலங்கா - 690 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து