முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. 2026 தேர்வு அட்டவணை வெளியானது: குரூப்-4 பணியிடங்களுக்கு 2026 டிசம்பரில் தேர்வு

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      தமிழகம்
TNPSC 2022 12 20

சென்னை, குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ந்தேதியும் நடத்தப்படும் என்றும், குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு (2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செய்து வருகிறது. அதன்படி, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு அட்டவணையை வெளியிட்டு அதன்படி, பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதும், தேர்வுகளை நடத்துவதுமான நடவடிக்கைகளை எடுக்கிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை https://tnpsc.gov.in/english/annual-planner.html என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 20-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 3-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ந்தேதியும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 11-ந்தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25-ண் தேதி தேர்வு நடத்தப்படும். அதிகம் பேர் விண்ணப்பிக்கக் கூடிய குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. தேர்வு டிசம்பர் 20-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பு வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து