எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நமது பூமியில், அகிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார். அதன் தாக்கம் இன்று வரை உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். நேற்று நடைபெற்ற உச்சி மாநாட்டுக்கு முன்னதாக புடின், காந்தியின் நினைவிடம் சென்றார். அங்கு அவர், மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு வைக்கப்பட்டு இருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
அதில் புடின் எழுதிய குறிப்பின் விவரம் வருமாறு; நமது பூமியில், அகிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார். அதன் தாக்கம் இன்று வரை உள்ளது. காந்தி ஒரு புதிய, நியாயமான, பன்முக உலக ஒழுங்கை நோக்கிய பாதையைக் காட்டினார், அது இப்போது உருவாகி வருகிறது. சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகள் ஆகியவை இன்று பன்னாட்டு அரங்கில் மதிப்புகளை பாதுகாக்கிறது. ரஷ்யாவும் அவ்வாறு தான் செய்கிறது. இவ்வாறு அவர் அந்த குறிப்பேட்டில் எழுதினார். கையெழுத்திட்டு எழுதிய அந்த குறிப்புகள் அனைத்தும் ரஷ்ய மொழியில் தான் இருந்தது, குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


