Idhayam Matrimony

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
Putin-india-2025-12-04

டெல்லி, புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை வந்த புதினை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நேற்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து, புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார். இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை திரெளபதி முர்மு, புதினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதன் தொடர்ச்சியாக புதினுடன் வருகை தந்துள்ள அந்நாட்டின் தூதுக்குழுவினரை புதின், ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகளை குலுக்கி, திரெளபதி முர்மு வரவேற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து