Idhayam Matrimony

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையானது.  கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. 

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் (டிச.,03)ஆபரண தங்கம் கிராம் 12,060 ரூபாய்க்கும், சவரன் 96,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 201 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (டிச.,04) தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 12,020 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 96,160 ரூபாய்க்கு விற்பனையானது.வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 200 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.196க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து