எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் காவல்துறை பறிமுதல் செய்த பல்வேறு வாகனங்களை ஏலம் விடுவது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம் அவர்களின் உத்தரவின்படி காவல் துறை தலைவர், குற்றம் அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30- இரண்டு சக்கர வாகனம், 2- மூன்று சக்கர வாகனம், 30- நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் என மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் 22.12.2025 அன்று 11 மணிக்கு மதுரையிலும் மற்றும் 24 வாகனங்கள் 23.12.2025 அன்று 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 7.12.2025 முதல் 21.12.2025 வரை திருச்சி (9498158708), கன்னியாகுமரி (9444580750), தேனி (9788924045), திண்டுகல் (7904065255), சிவகங்கை (8300063466), மதுரை (9585511010), நாகப்பட்டினம் (7904548453), கோயம்பத்தூர் (9498173282), சேலம் (7200008025) மற்றும் விழுப்புரம் (9894378470) ஆகிய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டு கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.1,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு இரண்டு நாட்களுக்குள் அதற்குண்டான ஜி.எஸ்.டி. தொகையை அவர்களுடைய ஜி.எஸ்.டி. கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை சம்மந்தப்பட்ட என்ஐபி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பின்னர் வாகனத்தின் விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


