எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மதுரைக்கு தேவை வளர்ச்சியா, அரசியலா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் கோர்ட் உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன் மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதை விசாரித்த கோர்ட் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


