எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. அதேபோல், குவைத்தில் இருந்து ஐதராபாத்திற்கு குவைத் ஏர்வேஸ் விமானம் நேற்று காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. இந்த 2 விமானங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத் விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசர அவரசமாக ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதேவேளை, ஐதராபாத் வந்து கொண்டிருந்த குவைத் ஏர்வேஸ் விமானம் நடு வானில் திரும்பி மீண்டும் குவைத்திற்கு திரும்பி சென்றவிட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 விமானங்களுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


