Idhayam Matrimony

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "சென்னையில் உள்ள பல சாலைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் குழந்தைகளை வைத்து பெண்கள் பலர் பிச்சை எடுக்கின்றனர். அந்த பெண்களிடம் உள்ள குழந்தைகள் எந்த நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பது பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளுக்கு உண்மையில் அந்த பெண்கள் தாய்தானா? என்பதிலும் சந்தேகம் உள்ளது. ஏன் என்றால், பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், அந்த குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை.

வெயில் அதிகம் இருந்தாலும், வாகன போக்குவரத்து சத்தங்கள் அதிகம் இருந்தாலும் அந்த குழந்தைகள் கண் விழிக்காமல், கண் மூடியபடி உள்ளன. இதற்காக அந்த குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை, ஏதாவது மருந்துகள் அல்லது மதுபானங்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளை காட்டி பிச்சை எடுக்கும் அந்த பெண்கள் பெரும்பாலும் தமிழ் பேசுவது இல்லை. அதனால், இந்த குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகிறதா? இந்த கொடூரமான செயல்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது அவசியமாகிறது.

இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செயலாளர், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.செந்தில்குமார், “பிச்சை எடுக்கும் குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தி, ஒருவேளை கடத்தப்பட்ட குழந்தையாக இருந்தால், அந்த குழந்தைகளை மீட்க வேண்டும். கடத்தி வந்து பிச்சை எடுக்கும் பெண்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும'' என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கொடுத்துள்ள கோரிக்கை மனு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து