Idhayam Matrimony

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
SIR 2025-11-17

சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இதற்கான கணக்கீட்டு காலம் வரும் 11-ந் தேதியுடன் முடிகிறது. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் வரை 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள், அதாவது 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 208 படிவங்கள் அதாவது 98.23 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 10 லட்சத்து 20 ஆயிரத்து 815 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 99.93 சதவீத படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 921 படிவங்கள் அதாவது 99.05 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து