Idhayam Matrimony

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் விவகாரம்: டாஸ்மாக் பணியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2025      தமிழகம்
Tasmac-Shop 2023 04 25

ஈரோடு, காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோட்டில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சோலார் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர், மின் விளக்குகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. அங்கு கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலம் எடுத்தவர்கள், கடைகள் அமைக்க அவகாசம் தேவைப்படுகிறது. பயணிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

காலி மதுபாட்டில்களை வெளியே போடும்போது விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டதால் தான், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற வேண்டும் என்றும் அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தான், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோர்ட்டு கொடுத்த கால அவகாச அடிப்படையில் பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறுவதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமை இருப்பதை ஒப்புக்கொள்கிறோம். அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை, காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் தொழிற்சங்கங்கள், பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

மதுபாட்டில்கள் வைப்பதற்கு இடம் பற்றாக்குறை இருப்பதால், ஒவ்வொரு நாளும் 2 முறை பாட்டில்கள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் துறையும், பணியாளர்களும் இணைந்து கோர்ட்டு உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து