முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டிகோ விமான சேவை பாதிப்பு: ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025      இந்தியா
Indigo 2024-12-21

டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால்  பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து துறை வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை.

குறிப்பாக, குறைவான விமானிகள், பணியாளர்களுடன் சேவையை தொடர்ந்தது. இதனால், கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவை பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 450 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு என பல்வேறு நகரங்களுக்கான இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேவேளை, இண்டிகோ விமான சேவை இன்னும் ஓரிரு நாட்களில் இயல்புநிலைக்கு திரும்பும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து