Idhayam Matrimony

மத்திய அரசு இணையதளத்தில் வக்பு சொத்துகள் பதிவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, அனைத்து பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துகளும் ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு’ (உமீது) போர்ட்டலில் 6 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது. இந்த போர்ட்டல் கடந்த ஜூன் 6-ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 6-ந்தேதி வரை சொத்து பதிவேற்றத்துக்கு காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என அரசும், சுப்ரீம் கோர்ட்டும் திட்டவட்டமாக தெரிவித்தன.

தற்போது இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அது தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உமீது போர்ட்டலில் 5,17,040 வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்னள. அவற்றில் 2,16,905 சொத்துகள் நியமிக்கப்பட்ட ஒப்புதல் அளிப்பவர்களால் அங்கீகரிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 92,830 ெசாத்துகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. அடுத்ததாக மராட்டியத்தில் 62,939 சொத்துகளும், கர்நாடகாவில் 58,328 சொத்துகளும் பதிவேற்றப்பட்டு உள்ளன. மேற்கு வங்காளத்தில் 23,086 சொத்துகள் பதிவேற்றப்பட்டன. மொத்தம் 2,13,941 சொத்துகள் தயாரிப்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் காலக்கெடுவின்படி அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சரிபார்ப்பின் போது 10,869 சொத்துகள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து