Idhayam Matrimony

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025      தமிழகம்
Annamalai 2024 11 20

சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து  அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணி, பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

தேர்தலில் அதிமுக , பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளன. அதேவேளை, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு , டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக விலகின. அதேவேளை, இந்த இரு கட்சிகளையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. அதன்படி, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒருமணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், அண்ணாமலை நேற்று முன்தினம் இரவு திடீர் பயணமாக கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்திய அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கூட்டணி குறித்த ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனின் நிலைப்பாடு குறித்து பா.ஜ.க. தலைமையிடம் அண்ணாமலை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து