எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, டெல்லியில் நடந்த தே.ஜ. கூட்டணி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடா் டிசம்பா் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் 15 அமா்வுகள் இடம்பெற உள்ளன. இந்த நிலையில், டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் பீகார் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பாராளுமன்றக் கட்சியின்போது நடைபெற்ற விவாதங்கள் குறித்து கிரண் ரிஜிஜூ கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் நலனுக்கான சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த எம்.பி.க்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியதாகக் அவர் கூறினார். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களும் தங்கள் தொகுதிகளுக்காகப் பணியாற்ற பிரதமர் மோடி வழிகாட்டினார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், எவ்விதப் பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் இருக்கவும் அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதையும் பிரதமர் வலியுறுத்தினார். சட்டங்கள் மக்களுக்கு உதவ வேண்டும். இளைஞர்களுடன் இணையுமாறும் எம்பிக்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த வழிகாட்டுதலுக்குப் பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தேசிய ஜனநாயகக் கூட்டணி பாராளுமன்றக் கட்சியின் மிகச் சிறந்த கூட்டமாகும் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


